கால்ஷீட் பிரச்சனை எதுவும் இல்லை….கண்டிப்பாக இவர்தான் ஹீரோயின்

by vignesh

அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளிவந்த மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்திற்கு பின் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தை கமிட் செய்துள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதிக்குள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரிஷா விடாமுயற்சி படத்திலிருந்து விலகி விட்டார் என ஷாக்கிங் நியூஸ் வெளிவந்தது. ஆனால், தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் செய்தியில், விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா தான் நடிக்கிறார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தயாரிப்பு தரப்பில் இருந்து வெளிவருமாம்.

You may also like

Leave a Comment