லொள்ளு சபா நடிகர் திடிர் மரணம் !!

by vignesh

 பிரபல காமெடி நடிகர், லட்சுமி நாராயணன் என்ற சேஷு. விஜய் தொலைக்காட்சியில் வெளியான ‘லொள்ளு சபா’ மூலம் பிரபலமானவர் இவர்.

சென்னை பள்ளிக்கரணையில் வசித்து வந்த சேஷுவுக்கு கடந்த 15-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 60. அவருடைய இறுதிச் சடங்கு இன்று நடக்கிறது.

You may also like

Leave a Comment