பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? லீக்கான லிஸ்ட்!

by vignesh

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, சமீபத்தில் நிறைவடைந்த நிலையில்… தற்போது சீசன் 7 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், சேனல் தரப்பில் இருந்து எந்தெந்த பிரபலங்களை அணுகி உள்ளனர், அவர்களில் யார் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் ஜாக்குலின். விஜய் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய கெரியரை துவங்கிய இவர், இயக்குனர் நெல்சன் திலீப் குமார், நயன்தாராவை வைத்து இயக்கிய ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில், நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘தேன்மொழி பி ஏ’ என்கிற சீரியலிலும் நடித்தார். சமீப காலமாக உடல் எடையை குறைத்து மீண்டும் திரைப்பட வாய்ப்புகளை தேடி வரும் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி சிறந்த பிளாட் ஃபாம்மாக அமையலாம் என்கிற எண்ணத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இவரைத் தொடர்ந்து இந்த லிஸ்டில் இருக்கும் மற்றொரு பிரபலம், பப்லு என அறியப்படும் நடிகர் பிருத்திவிராஜ் தான்.  திரைப்படங்களை விட சீரியல்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் பிரித்விராஜ், கடந்த ஆண்டு தன்னைவிட வயதில் மிகவும் குறைவான பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அதிர்ச்சி கொடுத்தார். இது குறித்து வெளியான விமர்சனங்களுக்கும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் பிரிதிவிராஜ், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சீசனில் கலந்து கொண்ட நடிகை ரக்ஷிதா மகாலட்சுமியின் கணவர் தினேஷை விஜய் டிவி தரப்பில் இருந்து பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்காக அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மகான்’ என்கிற சீரியல் மூலர் தன்னுடைய கெரியரை துவங்கியவர். அதை போல் பிரிவோம் சந்திப்போம், புதுக்கவிதை, போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது கூட விஜய் டிவி தொடரில் ஒளிபரப்பாகி வரும், ஈரமான ரோஜாவே 2 தொடரில் நடித்து வருகிறார். இவரை நிகழ்ச்சியில் கொண்டுவர தீவிர முயற்சி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை ரேகா நாயர் பெயர் ஏற்கனவே பிக்பாஸ் பட்டியலில் தொடர்ந்த அடிபட்டு வருகிறது. சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத பிரபலமாக அறியப்படுபவர் ரேகா நாயர். மனதில் பட்டதை முகத்துக்கு நேராக போட்டு உடைக்கும் இவரின் குணம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செம்ம கன்டென்ட்டாக அமையும், என்பதால் இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதே போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலம் இல்லாத, அதே நேரம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்ட நபர் ஒருவர் கலந்து கொள்வது வழக்கமாக உள்ள நிலையில், அந்த கேட்டகிரியில் கோயம்புத்தூர்  பெண் பஸ் ஓட்டுநராக ஷர்மிளா கலந்து கொள்ள அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

எண்டெர்டைன்மெட் கேட்டகிரியில் இந்த முறை நடன இயக்குனர் ஸ்ரீதர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக்பாஸ் சீசன் 1 துவங்கி,கடைசியாக முடிந்த பிபாஸ் சீசன் 6 வரை… கண்டிப்பாக நடன இயக்குனர்கள் கலந்து கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்து

You may also like

Leave a Comment