ஜெயிலர் விழா ரத்து??? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

by vignesh

ஜெயிலர் படக்குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. சிறையிலிருந்து தப்பித்து செல்லும் கூட்டத்தை தடுப்பதுதான் ஜெயிலரின் ஒன் லைன் என கூறப்படுகிறது. இருந்தாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் ரஜினிக்கான மாஸ் சீன்களில் நெல்சன் குறை வைத்திருக்கமாட்டார் என்று நம்பலாம்.

இந்நிலையில் காவலா பாடலின் தெலுங்கு வெர்ஷனான காவாலி பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக காவாலி பாடலுடைய வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுகிறது என்றும்; மாறாக பாடல் மட்டும் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளனர்.

You may also like

Leave a Comment