DD Returns Review

by vignesh

புதுச்சேரியில் மிகப்பெரிய டானாக வலம் வரும் அன்பரசு (ஃபெப்சி விஜயன்) தனது மகன் பென்னி (ரெடின் கிங்ஸ்ஸீ)க்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். அதன்படி பணம் கொடுத்து விருப்பமில்லாத பெண் ஒருவரை தேர்வு செய்கிறார். கடைசி நேரத்தில் அந்த பெண் ஓடிவிட, அவரது தங்கை சோஃபியாவை (சுரபி) மணம் முடிக்க ஆயத்தமாகின்றனர். இதையறிந்த சோஃபியாபவின் காதலர் சதீஷ் (சந்தானம்), அன்பரசு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து கல்யாணத்தை நிறுத்தி சோபியாவை மீட்க நினைக்கிறார். இதற்காக அவர் திரட்டிய பணம் பேய் பங்களா ஒன்றில் மாட்டிக்கொள்கிறது. இறுதியில் அந்த பணத்தை அவர் மீட்டாரா? இல்லையா? அந்த பங்களாவில் நடந்தது என்ன என்பது தான் படத்தின் மீதிக்கதை.

குளு குளு’, ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் காமெடிக்கு திரும்பியிருக்கிறார் சந்தானம். அவரின் முந்தைய பாடி ஷேமிங், அடல்ட் வகையறா நகைச்சுவைகளை தவிர்த்துவிட்டு காட்சிகளுக்கு ஏற்றார் போன்ற டைமிங் காமெடிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ப்ரேம் ஆனந்த். எதிர்பாராத தருணங்களில் ஆச்சரியப்படுத்தும் காட்சிகளுக்கு வலுசேர்க்கும் அவரது எழுத்து கதையோட்டத்துக்கு பெரும் பலம். நிறைய கதாபாத்திரங்களை கதைக்குள் கொண்டு வந்த போதிலும் அவற்றை வீண்டிக்காமலும், திணிக்காமலும் கொண்டு சென்றது நேர்த்தி. சின்ன சின்ன கொள்ளை கும்பல் அவர்களுக்கிடையே நடக்கும் சம்பவங்கள், கைமாறிக்கொண்டேயிருக்கும் பணம், சேஸிங், அதற்கு தகுந்தாற்போல நுழைக்கப்பட்ட காமெடிகள் என இடைவேளைக்கு முன்பு வரை கதைக்கருவான ஹாரருக்குள் நுழையாத திரைக்கதை பார்வையாளர்களுக்கு அயற்சி கொடுக்காமல் நகர்கிறது.

மொத்தமாக கதையையோ, ஹாரரையோ எதிர்பார்க்காமல் அடல்ட் காமெடி, உருவகேலி வசனங்களில்லாமல் ஜாலியாக பார்த்து சிரிக்க படத்தின் பெரும்பாலான காட்சிகள் கைகொடுக்கின்றன.

You may also like

Leave a Comment