ஈழத்திலிருந்து வந்து சரிகமப நிகழ்ச்சியில் கலக்க போகும் கில்மிசா

by vignesh

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ZEE தமிழில் அண்மையில் ‘சரிகமப’ நிகழ்ச்சிக்கான ஆடிஷன் நடந்தது. இதில் பல போட்டியாளர்கள் தமது குரல் வளத்தை வெளிப்படுத்தி நடுவர்களைக் கவர்ந்ததோடு செலக்ட் ஆனார்கள்.

அவர்கள் வரிசையில் அனைத்து நடுவர்களின் விருப்பத்திற்குரிய பாடகியாக தேர்வாகியவர் தான் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிசா. இவரது குரலைக் கேட்டு நடுவர்களே அசந்து போனதோடு தற்பொழுது ட்ரெண்டிங் பாடகியாகவும் கில்மிசா இருக்கின்றார்.

கில்மிசா யாழ்ப்பாணத்தில் இருப்பதோடு 8ம் வகுப்பில் கல்வி கற்று வருகின்றாராம். தன்னுடைய மூன்று வயதில் இருந்த பாட ஆரம்பித்த இவர் ஆரம்பத்தில் கோயில்களில் பஜனைப் பாடல்களை பாடி வந்தாராம். பின்னர் அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே என்ற பாடல் மூலம் தான் பாடகியாக மாறினாராம்.

இவர் சாரங்கா இசைக்குழு என்ற குழுவுடன் சேர்ந்து பல இசைக் கச்சேரிகளில் படி இருக்கின்றாராம். இது தவிர இந்தியப் பாடகர்களான ரமணியம்மா, அஜய் கிருஷ்ணா, வர்ஷா ஆகியோருடனும் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் பாடி இருக்கின்றாராம். அத்தோடு பல விருதுகளையும் பெற்றிருக்கின்றாரம்.

கில்மிசாவுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவாம். அவர் பாடகியாகவும் இருந்து கொண்டு டாக்டராகவும் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment