என்னடா இது காவாலா பாட்டுக்கு வந்த கஷ்ட காலம்….பிக் பாஸ் ஜனனி ஆடுறதை பார்த்து காண்டான ரசிகர்கள்!!!

by vignesh

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனிருத் இசையில் வெளியான காவாலா பாடலுக்கு தமன்னாவை போல டான்ஸ் போட பல இளம் நடிகைகளும் முயற்சித்து ரீல்ஸ் போட்டு அந்த பாடலை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இலங்கையில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஜனனின் சீசன் 6ல் என்ட்ரியானதுமே லாஸ்லியாவுடன் பலரும் கம்பேர் செய்ய ஆரம்பித்தனர். பிக் பாஸ் வீட்டில் கடந்த சீசனில் இருந்த போட்டியாளர்களில் முதல்கட்டமாக ஜனனிக்குத் தான் ரசிகர்கள் ஆர்மியை ஆரம்பித்தனர்.

அமுதவாணன் உடன் ஜனனி பேசத் தொடங்கியதும் கடைசி வரை அவரது ஷேடோவிலேயே இருந்து சரியாக விளையாடவில்லை என்றும் விமர்சிக்கப்பட்டார் ஜனனி.

லியோ படத்தில் நடித்திருப்பதாக கூறப்படும் ஜனனி திடீரென ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டுக்கு தற்போது ரீல்ஸ் போட்டிருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

கருநீல நிற வெல்வட் உடையை அணிந்து கொண்டு செம க்யூட்டாக பொம்மை போல டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஜனனி.

ஜனனியின் ஆட்டத்தை அவரது ரசிகர்கள் சூப்பராக இருக்கு என கமெண்ட் போட்டு கொண்டாடி வரும் நிலையில், நெட்டிசன்கள், என்னடா இது காவாலா பாட்டுக்கு வந்த கஷ்ட காலம் என்றும், பள்ளி ஆண்டு விழாவில் ஸ்டெப்ஸ் தெரியாமல் பச்சைக் குழந்தைகள் டான்ஸ் ஆடுவது போன்ற ஒரு ஆட்டத்தை போட்டு காவாலா பாட்டையும் தமன்னா டான்ஸையுமே கலாய்க்கிறார் ஜனனி என ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

You may also like

Leave a Comment