அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கும் பிக்பாஸ் பிரபலங்கள்…

by vignesh

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தும் ஆட்கள் எல்லாம் வில்லங்கம் பிடித்தவர்களாகவும், சர்ச்சைக்கு கொஞ்சமும் குறைவில்லாத நபர்களாகவே எடுத்து வருவதாக ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், சமீப காலமாக குற்றவாளிகளாக தேடித் தேடி நிகழ்ச்சிக்கு போட்டியாளராக கொண்டு வந்து மக்களை முட்டாள் ஆக்குறீங்களா என பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

ஏற்கனவே பிக் பாஸ் பிரபலமாக வலம் வந்த மீரா மிதுன் வெளியே வந்தும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி படு ஆபாசமாக ட்வீட்களை போட்டு சிக்கலில் சிக்கினார். கடைசியில் பட்டியலினத்தவர் பற்றி பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் ஜாமீனில் வெளிவந்த நிலையில், எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இத்தனை ஆண்டுகள் தலைமறைவாகவே உள்ளார்.

அந்த வரிசையில் தற்போது விக்ரமனும் வசமாக சிக்கி உள்ளார். பெண்கள் மேட்டரில் சிக்கி பெரும் சர்ச்சை வலையில் தற்போது விக்ரமன் வசமாக மாட்டி உள்ளது பிக் பாஸ் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தி உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நல்ல போட்டியாளர்களை தேர்வு செய்யுங்க என்றும் டிஆர்பிக்காக கிரைம் ரேட் போட்டியாளர்களை கொண்டு வந்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் முன்னிறுத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment