குத்தாட்டம் போட்ட பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்

by vignesh

பிரான்ஸின் பாரிஸ் நகருக்கு சென்று பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், அங்குள்ள ஈபிள் கோபுரத்தின் முன் தனது மகள் அலிசாவுடன் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. அந்த வீடியோவில், சுஷ்மிதா சென்னும் அவரது மகள் அலிசாவும் ஈபிள் கோபுரத்தின் முன் இருவரும் சுழல் நடனமாடுகின்றனர்.

மிகவும் நேர்த்தியான பின்னணியுடன் சுழலும் செல்பியை இருவரும் எடுத்துக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, இருவரும் அழகிய கட்டிடத்தின் முன் டான்ஸ் ஆடுகின்றனர். இதுகுறித்து சுஷ்மிதா சென் வெளியிட்ட பதிவில், ‘எனது மகளுடன் பிரான்சின் பாரிஸ் நகருக்கு சென்ற முதல் பயணம்! காலம் எவ்வளவு வேகமாக செல்கிறது. நாங்கள் இருவரும் சேர்ந்து ஆடியது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

 

You may also like

Leave a Comment