4 நாட்களில் வசூல் எவ்வளவு??? அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாவீரன் படக்குழு…

by vignesh

வெள்ளிக்கிழமை வெளியான மாவீரன் திரைப்படத்தை மண்டேலா படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கி இருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர், அம்மாவாக சரிதா, தங்கையாக மோனிஷா பிளெஸ்ஸி, காமெடியனாக யோகி பாபு மற்றும் வில்லனாக மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான நிலையில் 50 கோடி வசூலை முதல் வாரத்திலேயே எட்டி உள்ளது.

தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் சற்று முன் அதன் அதிகாரப்பூர்வ வசூலை அறிவித்து சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மாவீரன் படக்குழுவினரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது.

You may also like

Leave a Comment