லால் சலாம் படத்திற்கு U/A சர்டிபிகேட் தந்த தணிக்கை குழு….

by vignesh

கிரிக்கெட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். முன்னதாக 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினி, தற்போது தன்னுடைய அப்பாவும் சூப்பர்ஸ்டாருமான ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடிக்க லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் மேலும் நிரோஷா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டவர்களும் நடித்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விளையாட்டை மையமாக கொண்டு, அரசியல் பேசும் படமாக லால் சலாம் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக படத்தின் கிளிம்ப்ஸ், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த வகையில் இன்றைய தினம் படத்திற்கு U/A சர்டிபிகேட்டினை தணிக்கை குழு தந்துள்ளது.

 

You may also like

Leave a Comment