டிடி ரிட்டன்ஸ் நிஜவாழ்க்கையில் எங்களை வாழவைப்பது பேய்தான் சந்தானம் பேச்சு!

by vignesh

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் டிடி ரிட்டன்ஸ், இதில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில் உருவாகி உள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ஜூலை 28ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புயில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர் சந்தானம், எழுத்தாளர் இந்திரா சௌந்தர ராஜன், ஒளிப்பதிவாளர் தீபக்,இசையமைப்பாளர் ஆஃப்ரோ, நடிகர் ரெடின் கிங்ஸ்லி, நடிகை சுரபி, இயக்குநர் பிரேம் மற்றும் படக்குழுவினர் பலர் கொண்டனர்.

இதில் பேசிய சந்தானம், பேய் படத்தில் பேய் எல்லாரையும் சாக அடித்தாலும், நிஜவாழ்க்கையில் எங்களை வாழவைப்பது பேய்தான். ஏன் என்றால் ‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன. டிடி ரிட்டர்ன்சும் மக்களின் மனங்களை கவரும் என்று நான் நம்புகிறேன். இதில் வரும் ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு மாதிரி இருக்கும், இயக்குநர் பிரேம் ஆனந்த் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.

நான் நடித்த சில படங்கள் சந்தானம் படம் போல இல்லையே என்று சொன்னவர்களுக்காக டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் முழுக்க முழுக்க சந்தானம் திரைப்படமாக இருக்கும் இந்த முறை காமெடி மிஸ் ஆகாது. எங்கள் குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும். படத்திற்கு தங்கள் மேலான ஆதரவை வழங்குமாறு ரசிகப் பெருமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று சந்தானம் பேசினார்.

You may also like

Leave a Comment