மாவீரன் ரிலீஸ்…சூரி சொன்ன வாழ்த்து…

by vignesh

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மாவீரன். பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பதால் நிச்சயம் இப்படம் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எழுந்திருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் படம் வெளியாகியிருக்கிறது.

இந்தச் சூழலில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்களில் நடித்தவரும், அவருக்கு நெருக்கமானவர்களில் ஒருவருமான சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் மாவீரன் படம் குறித்து, “”மாவீரன்”திரைப்படம் மாபெரும் வெற்றி பெற அன்புத்தம்பி சிவகார்த்திகேயனுக்கும், அன்புத்தம்பி அருண் விஸ்வாவுக்கும் (மாவீரன் படத்தின் தயாரிப்பாளர்) மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்” என குறிப்பிட்டிருக்கிறார்.

You may also like

Leave a Comment