’கல்கி’ அவதாரமெடுத்த பிரபாஸ்… வெளியானது க்ளிம்ப்ஸ்!

by vignesh

பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாபச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடிக்க இருக்கும் ’புரொஜக்ட் கே’ என்ற படத்தின்  கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் காமிக் கான் நிகழ்வில் ‘புராஜெக்ட் கே’ படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்துக்கு ‘கல்கி 2898 AD’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment