நடிகை இலியானா கேடி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகம்ஆனவர் . அவர் அதன் பின் விஜய்யின் நண்பன் படத்திலும் ஹீரோயினாக நடித்தார். தெலுங்கு மற்றும் ஹிந்தியில் அதிகம் படங்கள் நடித்து இருக்கிறார்.
இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து சில மாதங்களுக்கு முன்பு எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தார்.
தற்போது 9 மாதம் கர்ப்பமாக இருக்கும் இலியானா முதல் முறையாக அவரது காதலர் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.
Date Night என குறிப்பிட்டு நேற்று இரவு இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட போட்டோவை இலியானா வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.