அநீதி மற்றும் கொலை படத்தின் முதல் நாள் வசூல்!!!

by vignesh

இந்த வாரம் திரையரங்கில் வெளியான, அநீதி, கொலை படங்களின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த வாரம், மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘கொலை’, ‘அநீதி’ மற்றும் ‘சத்திய சோதனை’ ஆகிய மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. இந்த மூன்று படங்களுமே… விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படங்களில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது

எதார்த்தமான கதைகளத்தில், சாதாரண மனிதர்களை பற்றிய படங்களை இயக்கி வெற்றி கண்ட இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘அநீதி’.  இதுவரை திரையுலகில் பேசப்படாத புது கதையையும், புதிய பிரச்சனையையும் எதிரொலிக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் முதல் நாளில் 80 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியாகி உள்ள திரைப்படம் ‘கொலை’ . இந்த படத்தை பாலாஜி கே குமார் இயக்கி உள்ளார். ரித்திகா சிங், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம், ஒரு கொலையின் தேடலை மையமாக வைத்து,  இன்வெஸ்டிகேஷன் திரில்லராக வெளியாகி உள்ளது. பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான காட்சிகளுடன் வெளியாகி உள்ள இந்த திரைப்படம், முதல் நாளில் 40 முதல் 50 லட்சம் வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment