ஜோஷ் செயலியுடன் இணைந்து நடிகை ஆண்ட்ரியா நடத்தும் இசைக் கச்சேரி நிகழ்ச்சி வரும் ஜூலை 22ம் தேதி சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. வெளிநாட்டு இசைக் கலைஞர்களை போல தற்போது கோலிவுட் பிரபலங்களும் உள்ளூர் முதல் சர்வதேச அளவில் இசைக் கச்சேரிகளை நடத்தி வருகின்றனர்.
நடிகை ஆண்ட்ரியா வெளிநாடுகளில் இசை கச்சேரியை நடத்தி வந்த நிலையில், அடுத்ததாக சேலத்தில் தமிழ்நாட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்த சூப்பரான இசைக் கச்சேரி ஒன்றை ஜோஷ் செயலியுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தில் இடம்பெற்ற “கண்ணும் கண்ணும் நோக்கியா” பாடலை பாடி பாடகராக அறிமுகமான இவர் ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடி உள்ளார்.
ஜூலை 22ம் தேதி சேலத்தில் உள்ள ஜவஹர் மில்ஸ் ரமணி திடலில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு நடிகையும் பிரபல பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசைக் கச்சேரி நடைபெற உள்ளது.