படம் ரீலுசுக்கு முன்னாடி ரசிகர் கேட்ட கேள்வி கடுப்பான அதிதி ஷங்கர்!

by vignesh

கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கடந்த ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான அதிதி ஷங்கர் தனது இரண்டாவது படமான மாவீரன் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்து ரசித்துள்ளார்.

விருமன் படத்தில் யுவன் இசையில் ஒரு பாடலை பாடியிருந்த அதிதி ஷங்கர் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பாடிய “வண்ணாரப்பேட்டையில” பாடல் வேறலெவல் ஹிட் அடித்தது.

யோகி பாபுவை வைத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி உள்ள மாவீரன் படம் நடிகை அதிதி ஷங்கருக்கும் இரண்டாவது படம்.

தியேட்டருக்கு வந்து ஆசையாக தான் நடித்த 2வது படத்தை பார்க்க சீட்டில் அமர்ந்த உடனே படம் எப்படி இருக்கு மேடம் என ஒரு யூடியூபர் மைக்கை நீட்ட, படமே இன்னும் போடல, படத்தை பாருங்க, என்ஜாய் பண்ணுங்க, ப்ளீ ஸ், கிளம்புங்க என்பது போல பேசிய வீடியோ அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

You may also like

Leave a Comment