கொலை படம் எப்படி இருக்கு வாங்க பார்க்கலாம்…

by vignesh

Infiniti Film Ventures மற்றும் Lotus Pictures இணைந்து தயாரித்து பாலாஜி கே. குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் கொலை. இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களம் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தது.

மிகவும் பிரபலமான மாடலாக இருக்கும் லைலா {மீனாட்சி சௌத்ரி} தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். இந்த கேஸ் காவல்துறை அதிகாரியான ரித்திகா சிங்கிடம் செல்கிறது. ஒரு வாரத்திற்குள் இந்த கேஸை முடிக்க வேண்டும் என மேலதிகாரிகளால் கெடு கொடுக்கப்படுகிறது.

இந்த சமயத்தில் விஜய் ஆண்டனியின் உதவியை நாடுகிறார் ரித்திகா. ஆனால், முதலில் இந்த கேஸை எடுத்துக்கொள்ள மாட்டேன் என கூறும் விஜய் ஆண்டனி பின், சில காரணங்களால் முழு மூச்சுடன் இந்த கேஸை ரித்திகாவுடன் இணைந்து விசாரிக்க துவங்குகிறார்.

விஜய் ஆண்டனி விசாரணையில் யார் யாரெல்லாம் சிக்கினார்கள், கொலையாளியை கண்டு பிடித்தாரா விஜய் ஆண்டனி, ஏன்? எதற்காக லைலா கொலை செய்யப்பட்டார் என்பதே படத்தின் மீதி கதை…

You may also like

Leave a Comment