உங்க வயசுக்கு இப்படி பண்ணலாமா? ப்ளூ சட்டை மாறனுக்கு மாவீரன் படத் தயாரிப்பாளர் கேள்வி!

by vasanthan

கடந்த சில வாரங்களாக பெரிய படங்கள் வராமல் இருந்து வந்த நிலையில், சைலன்ட் மோடில் இருந்த ப்ளூ சட்டை மாறன் மாமன்னன் படம் ரிலீஸ் ஆனதும் உதயநிதி ஸ்டாலின் பற்றி மட்டும் பேசாமல் மற்ற விஷயங்களை பேசி சர்ச்சை ட்வீட்களை போட்டு வந்தார்.
இந்நிலையில், அடுத்து அவருக்கு தொக்காக சிவகார்த்திகேயனின் மாவீரன் ரிலீஸ் சிக்கி உள்ளது. அடுத்த ரஜினி ரேஞ்சுக்கு மிஷ்கின், சரிதா என படத்தில் நடித்த பலரும் பேசியதை ட்ரோல் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் போட்ட ஒரு ட்வீட் மாவீரன் படத்தின் தயாரிப்பாளரின் பொறுமையையே சோதித்து விட்டது.

இந்நிலையில், அதிரடியாக உங்க வயசுக்கு இப்படி பண்ணலாமா ப்ளூ சட்டை மாறன் சார்? என்றே கேள்வி எழுப்பி உள்ளார் மாவீரன் படத் தயாரிப்பாளர் அருண் விஸ்வா.

படத்தின் டிரெய்லர் வெளியீடு தாமதம் ஆகும் என்கிற அறிவிப்பு வந்தபோதே, ஒன்றும் அவசியமில்லை பொறுமையாக வரட்டும் என சொன்ன ப்ளூ சட்டை, ரஜினியுடன் சிவகார்த்திகேயனை கம்பேர் செய்ததை வன்மையாக கண்டித்தார்.

Maaveeran Producer blasts Blue Sattai Maran for his troll on Sivakarthikeyan

Maaveeran Producer blasts Blue Sattai Maran for his troll on Sivakarthikeyan

மல்லுக்கு வந்த மாவீரன் தயாரிப்பாளர்: வணக்கம் சார்.. என் பேரு அருண் விஸ்வா.. நான் தான் மாவீரன் படத்தோட தயாரிப்பாளர். எனக்கு என் படம் தான் மிஷன் இம்பாசிபிள், அவதார், ஆர்ஆர்ஆர் எல்லாமே.. உங்க வயசுக்கு இப்படியொரு பிக்கை ஷேர் பண்ணி நீங்க இதை பண்ணியிருக்க வேண்டாம் சார்” என ரொம்ப மரியாதையாக ப்ளூ சட்டை மாறனுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment