துணிக்கடை திறந்த சினேகா: சினேகாலயா சில்க்ஸ்

by vignesh

சுஹாசினி என்ற தனது பெயரை மாற்றி சினேகா என்ற பெயருடன் தமிழில் அறிமுகமானார். விரும்புகிறேன் என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகினார்.

இந்த திரைப்படமானது வெளியாவதில் தாமதமாகியது. இதையடுத்து மாதவனுடன் என்னவளே திரைப்படத்தில் நடித்தார், அதுவே அவரது முதல் படமாக அமைந்தது.

தொடர்தது ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ், வசீகரா, உன்னை நினைத்து, ஜனா, ஆட்டோகிராப், பிரிவோம் சந்திப்போம் 10 வருடங்கள் டாப் நாயகியாக வலம் வந்தார்.

இவருக்கு நடிகர் பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நடிகை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை தி.நகரில் ‘சினேகாலயா சில்க்ஸ்’ எனும் கடையை திறந்து புதிய தொழிலை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

You may also like

Leave a Comment