யோகிபாபுவின் ‘லக்கி மேன்’ டீசர்

by vignesh

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘லக்கி மேன்’. திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ளார். யோகிபாபு கதையின் நாயகனாக நடிக்க வீரா, ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ்.சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் படத்துக்கு இசையமைக்கிறார்.

 “இந்த உலகம் அழகோட இருக்குறவன ரசிக்கும், அறிவோட இருக்குறவன மதிக்கும். பணத்தோட இருக்குறவன பாத்து பொறாமைப்படும். பவர்ல இருக்குறவன பாத்து பயப்படும். ஆனா என்னைக்குமே உழைக்கிறவன மட்டும்தான் நம்பும்” என்ற டீசரின் முதல் வசனம் ‘லக்கி மேன்’ என்ற டைட்டிலிருந்து முரண்படுகிறது. அதிர்ஷடத்துக்கும் உழைப்புக்குமிடையே இருக்கும் முரணை படம் பேசும் எனத் தெரிகிறது.

You may also like

Leave a Comment