மகள்களை பறிகொடுக்கும் திரை பிரபலங்கள்.. தொடரும் சோகம்

by vignesh

தமிழ் சினிமாவின் திறமையான பாடலாசிரியரான கபிலன் தனது மகள் தூரிகையை கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இழந்து தவித்த காட்சிகள் ரசிகர்களை பதைபதைக்க செய்தன. இளம் பருவக் குமரியாக வளர்ந்து நின்ற தூரிகை திடீரென அரும்பாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா தனது 16 வயதில் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

80 வயதை கடந்த இளையராஜா தனது மகள் பவதாரிணி புற்றுநோய் காரணமாக உயிரிழந்து நல்லடக்கம் செய்யப்படுவதை பார்த்து இடிந்து போய் விட்டார். இலங்கை மருத்துவமனையிலேயே உயிரிழந்த உடலாக பாடும் குயில் பவதாரிணி இருந்ததை பார்த்து கதறி அழுத இளையராஜா தனது மகளுக்கு இறுதிச்சடங்குகளை செய்து இசையோடு என்றும் கலந்திரு மகளே என கலங்கிய உள்ளத்துடன் வழியனுப்பி வைத்து வாயடைத்துப் போய் விட்டார்.

தங்கமீன்களை இழந்து வாடும் தந்தையர்களின் இந்த கொடுமையான நிலைமை இனி எந்தவொரு தந்தைக்கும் வரக்கூடாது என்றே ரசிகர்கள் இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.

You may also like

Leave a Comment