குஷி பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சமந்தாவிடம் எல்லை மீறிய விஜய் தேவர்கொண்டா???

by vignesh

தெலுங்கு இயக்குநரான சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல்லா வஹாப் இசையமைத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவிசங்கர் யெலமஞ்சலி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று இருக்கிறது.அந்த நிகழ்ச்சிக்கு சமந்தா மிக கவர்ச்சியான உடையில் வந்திருக்கிறார்.

மேடையில் ஹீரோ விஜய் தேவர்கொண்டா மற்றும் சமந்தா இருவரும் பாடல்களுக்கு நடனம் ஆடி இருக்கின்றனர்.மேலும் சமந்தாவை விஜய் தேவர்கொண்டா அலேக்காக தூக்கி இருக்கும் வீடியோவும்  வைரலாகி வருகின்றது.

 

View this post on Instagram

 

A post shared by Samantha (@samantha_version)

 

You may also like

Leave a Comment