டிடிஎஃப் வாசன் & கோவினரை அடித்து விரட்டிய கேப்டன் ரசிகர்!!!

by vignesh

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன். 2K கிட்ஸ்கள் மத்தியில் வெகு பிரபலமான அவர் பைக் ரைடு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு சாலையில் அதிவேகத்தில் சென்று விபத்தில் சிக்கினார். அதன் பிறகு அவர் மீது வழக்கு தொடரப்பட்டு சிறை சென்ற அவர் தற்போது அமைதியாக இருந்துவருகிறார்.

இந்த சூழலில் கடந்த மாதம் உயிரிழந்த கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது நினைவிடத்துக்கு சென்றார் டிடிஎஃப் வாசன். சென்றவர் அஞ்சலியை மட்டும் செலுத்திவிட்டு வராமல் தனது ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்க ஆரம்பித்தார். இதனை கவனித்த கேப்டன் ரசிகர் ஒருவர் டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை அங்கிருந்து விரட்டிவிட்டார்.

You may also like

Leave a Comment