‘லியோ’ ட்ரெய்லரில் திருத்தம் செய்த படக்குழு

by vignesh

விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற தகாக வார்த்தையை படக்குழு மியூட் செய்துள்ளது.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம்,‘லியோ’. சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் வரும் 19ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெற்றது. ட்ரெய்லரின் ஒரு இடத்தில் விஜய் பேசும் தகாத வார்த்தை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தொடர்ந்து பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், ‘லியோ ‘ ட்ரெய்லரில் இடம்பெற்ற அந்த வார்த்தையை தற்போது படக்குழு மியூட் செய்துள்ளது.

You may also like

Leave a Comment