வெங்கட் பிரபு இயக்கும் ‘விஜய் 68’படத்தின் பாடல் காட்சி படப்பிடிப்பு நிறைவு

by vignesh

வெங்கட் பிரபு இயக்கும் படத்தில்  விஜய் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம் உட்பட பலர் நடிக்கின்றனர்.

விஜய்யின் 68 வது படமான இதற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. முதலில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நட்பு பற்றிய இந்தப் பாடலில், விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இணைந்து பங்கேற்றுள்ளனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.  அடுத்த ஷெட்யூல் விரைவில் சென்னையில் தொடங்க இருக்கிறது.

You may also like

Leave a Comment