ரசிகர்களை அதிகம் கவர்ந்து ஹிட் ஆன படம் சீதா ராமம். ஒரு ராணுவ வீரருக்கும் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசிக்கும் இடையே மலரும் காதல் பற்றியது தான் இந்த படம்.
இந்த படம் அனைவரையும், குறிப்பாக காதலர்களை அதிகம் கவர்ந்தது. இதில் ராம் ரோலில் துல்கர் சல்மான் மற்றும் சீதாவாக மிருனாள் தாகூர் ஆகியோர் நடித்து இருந்தனர். ராஷ்மிகாவும் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார்.
தற்போது சீதா ராமம் படம் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன் இந்திய திரைப்பட விழா 2023வில் திரையிடப்பட்டு இருக்கிறது.
அதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை சீதா ராமம் படம் வென்று இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.