முதல் மனைவி குறித்து ஓபனாக கூறிய சரத்குமார்…

by vignesh

நடிகர் சரத்குமார், தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர்.

சரத்குமார் ஒரு பேட்டியில், கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது கருணையாக இருக்கிறார். தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தபோதும் அவர் எங்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

வரலட்சுமியிடமும் நீ உன் அப்பாவிடம் பேசக்கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. தற்போது நாங்கள் நண்பர்களாக பயணிக்கிறோம், எல்லோரும் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.

ஆரம்பத்தில் வரலட்சுமியும், ராதிகாவும் பழகும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தது உண்மை தான். தற்போது இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள் என்று கூறியிருக்கிறார்.

You may also like

Leave a Comment