விஜய் ஆண்டனியின் ரத்தம் Review !

by vignesh

இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட் குமாரக வரும் விஜய் ஆண்டனி தனது மனைவி இறைந்தவுடன் தனது மகளுடன் கொல்கத்தா செல்கின்றார் .சென்னையில் அவரது நண்பர், மர்ம நபர் ஒருவரால் பத்திரிகை அலுவலகத்திலேயே கொடூரமாக கொல்லப்படுகிறார்.  இந்நிலையில் நிழல்கள் ரவியின் வேண்டுகோளின்படி மீண்டும் சென்னைக்கு வருகிறார். வந்தவர், தனது நண்பன் செழியனின் கொலைக்கான பின்னணியை ஆராய தொடங்கும்போது அவருக்கு பல தகவல்கள் கிடைக்கப் பெறுகின்றன.

இவரின் மறைவை தொடர்ந்து ஒரு மாவட்ட ஆட்சியரும் கொல்லப்படுகிறார். இந்தக் கொலைகளுக்குப் பின்னால் ஒரு குழு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்கிறார். அந்த கும்பல் யார், அவர்களது நோக்கம் என்பதைக் கண்டறிவதற்கான ஹீரோவின் பயணமே ‘ரத்தம்’ படத்தின் திரைக்கதை.

You may also like

Leave a Comment