ராஷ்மிகாவுடன் செல்பி எடுக்கப்போய் போனைப் பறித்த ரசிகர் நடந்தது என்ன?விடியோ இதோ…!

by vignesh

ராஷ்மிகா தற்போது இந்திய அளவில் பாப்புலர் ஆன ஒரு நடிகை. அதுமட்டுமல்லாது நேஷ்னல் கிரஷ் என அவரை ரசிகர்கள் குறிப்பிடுவதும் உண்டு. அந்த அளவுக்கு அவர் ரசிகர்களை ஈர்த்திருக்கிறார்.

சினிமாவைத் தாண்டி ராஷ்மிகா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்கள் அல்லது வேடிக்கையான வீடியோக்களை வெளியிட்டு படு ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் ராஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களை சந்திக்கும்போது எப்போதும் புன்னகையுடன் காணப்படுவது வழமையான ஒன்று.
இந்நிலையில் வர்த்தக விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்றைய தினம் மும்பைக்கு சென்று உள்ளார். அந்த சமயத்தில்  ஒவ்வொரு ரசிகருடனும் அவர் பொறுமையாக புகைப்படங்களை எடுத்து கொண்டார். அப்போது, ஒரு புகைப்படத்திற்கு ராஷ்மிகா தயாரானபோது, ரசிகர் ஒருவரின் மொபைல் போனை தனது கையில் பிடித்து கொண்டார். அதன்பின்னர் புகைப்படம் எடுக்கும்படி கூறினார்.ஆனால் அந்த ரசிகர்கு என்ன அவசரமோ தெரியவில்லை, அந்த ரசிகர் உடனடியாக தன்னுடையபோனை ராஷ்மிகாவிடமிருந்து  பறித்து கொண்டார். இதனால் சூழ்ந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும், சூழ்நிலையை சாமாளித்துக் கொண்டு ராஷ்மிகா சிரித்தபடியே காணப்பட்டார். இது அவரது எளிமையை காட்டுகிறது என கூறி ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

You may also like

Leave a Comment