அட்ஜெஸ்ட்மெண்ட்டு- ரம்யா நம்பீசன் ஓபன் டாக்

by vignesh

அட்ஜெஸ்ட்மெண்ட்டால் தாங்கள் சந்திக்கும் கொடுமை குறித்து நடிகைகள் வெளியில் பேசுவது அரிதிலும் அரிதுதான். ஆனால் சமீபகாலமாக தைரியமாக அனைத்தையும் பேசிவருகின்றனர். லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவிடம் கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கான அப்ரோச் போயிருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். அதேபோல் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் தனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து நடிகையும், பாடகியுமான ரம்யா நம்பீசன் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “சினிமாவில் நடிகைகளுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் தொல்லை இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் அப்படி நடக்கும்போது அதை தைரியமாக எதிர்கொண்டு பொதுவெளியில் அதைப்பற்றி பேச வேண்டும். அதுமட்டுமின்றி அவ்வாறு அழைப்பவர்களிடம் நடிகைகள் எதைப்பற்றியும் யோசிக்காமல் வலுவான மனநிலையி இருந்துகொண்டு அதை மறுக்க வேண்டும்” என்றார்.

You may also like

Leave a Comment