சுதந்திர தினம் கொண்டாடிய ரஜினிகாந்த்…

by vignesh

தனக்கு ஓய்வு கிடைக்கும் போது இமயமலை செல்வதை வாடிக்கையாகக் கொண்டவர் ரஜினிகாந்த். குறிப்பாக தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அவர் இமயமலை செல்வது வழக்கம். கரோனா காரணமாக அவர் கடந்த 4 ஆண்டுகளாக அங்கு செல்லவில்லை.

இப்போது அங்கு சென்றுள்ள ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா,பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல திட்டமிட்டு நண்பர்களுடன் சென்றார். முதலில் ரிஷிகேஷில் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்குச் சென்ற அவர், ரிஷிகளைச்சந்தித்து உரையாடினார். பின்னர் உத்தரகண்ட்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்ட அவர், பத்ரிநாத் கோயிலுக்குச் சென்றும் வழிபட்டார்.

இந்நிலையில் 77-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு துவாரஹாத்தில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரமத்தில் தேசிய கொடி ஏந்தி கொண்டாடினார். அங்கிருந்தவர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் அவருடன் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment