வடிவேலை விளாசித் தள்ளிய நடிகை ராதிகா…

by vignesh

வடிவேலு மீது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட கோபம் வந்தது என்றால் விஜயகாந்த் இறப்பு விவகாரத்தில்தான். வடிவேலுவை வளர்த்துவிட்டவர்களில் விஜயகாந்த்தும் ஒருவர் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அப்படிப்பட்டவர் இறந்ததற்கு வடிவேலு நேரில் வராதது விமர்சனத்தை எழுப்பியது. இருந்தாலும் அவர் வந்திருந்தால் கண்டிப்பாக பிரச்னை வந்திருக்கும் என சிலர் கூறினர். சரி நேரில் வந்தால்தானே பிரச்னை இரங்கலாவது தெரிவித்திருக்கலாமே அதைக்கூடவா செய்ய முடியாது என்று பெரும்பாலானோர் வடிவேலுவுக்கு எதிராக திரும்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை ராதிகா வடிவேலு குறித்து பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஒரு மேடையில் பேசிய அவர், “வடிவேலுவை பற்றி நான் பேச விரும்பவில்லை. ஒருமுறை விமானத்தில் அவரை சந்தித்தேன். அப்போது அவரிடம் எனது கணவர் சரத்குமார் படம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் எனது மகன் ராகுல் வடிவேலுவிடம், எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். நீங்கள் எங்கள் அப்பா படத்தில் நடிக்கிறீர்களா என ஆசையோடு கேட்டான். ஆனால் அவரோ சிரித்துக்கொண்டே, அரசியல்வாதிகளுக்கு எல்லாம் நான் வாழ்க்கை கொடுப்பதில்லை ப்பா என்றார். இவரு வாழ்க்கை கொடுக்கிறாராம். இப்ப நீ எங்க இருக்க நாங்க எங்க இருக்கோம் என விளாசித் தள்ளினார்.

You may also like

Leave a Comment