பிரபலங்கள் இறப்பு… பொய் செய்தி பரப்பும் குரூப்…

by vignesh

சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் இறந்து விட்டார்கள் என பொய்ச்  செய்தி பரப்புவதை வாடிக்கையாயவே வைத்துள்ளது ஒரு  குரூப், அவர்கள் வேலையே நீண்ட காலமாக ஒருவர் திரைத் துறையில் தொடர்பு இல்லாமல் இருந்தார் உடனே அவர்கள் இறந்து விட்டதாக  வதந்தி பரப்பி விடுவார்கள்.

ஏற்கனவே நடிகை ஷகிலா, காமெடி நடிகர் செந்தில், ஜனகராஜ் ஆகியோர் இறந்து விட்டார்கள் என வதத்தியை பரப்பி விட்டனர்கள் பின்னர் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் அது குறித்து வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுப்பார்கள் அந்த வரிசையில் தற்போது பூனம் பாண்டேவும் சேர்ந்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை பூனம் பாண்டே. ஏராளமான ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார். சோஷியல் மீடியாவில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் இவர் குறித்து, இன்ஸ்டாகிராமில் அவர் இறந்து விட்டதாக அதிர்ச்சியான செய்தி ஒன்று பரவியது.

அவரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவிக்கும் நிலையில் பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராமில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் நான் உயிரிழக்கவில்லை. நான் உயிருடன் தான் இருக்கிறேன். ஏராளமான பெண்கள் துரதிஷ்டவசமாக கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழக்கிறார்கள். இது முற்றிலும் தடுக்கப்படக்கூடிய ஒரு நோய். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட விழிப்புணர்வு விளம்பரம் என கூறியிருந்தார்.

You may also like

Leave a Comment