வெற்றிமாறனை விமர்சித்த இயக்குநர் பேரரசு…

by vignesh

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்களாக இருக்கின்றனர். சமீபத்தில் இவர் நயன்தாரா நடித்த அன்னபூரணி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த சூழலில் வெற்றிமாறனுக்கு பேரரசு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “வெற்றிமாறனின் கருத்தை வரவேற்கிறேன். இதே கருத்தை கேரளா ஸ்டோரி படத்தின்போது தெரிவித்திருந்தால் அவரது சினிமா பற்று உறுதியாகியிருக்கும். ஆனால் அன்னபூரணிக்கு தெரிவிக்கும்போது அவரது குறிப்பிட்ட சாதி வெறுப்புதான் வெளிப்படுகிறது. திரைப்பட பற்றாளனாய் இருங்கள் வெற்றிமாறன்” என குறிப்பிட்டிருக்கிறார்.

You may also like

Leave a Comment