மணிரத்னமும் கமல் ஹாசனும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கிளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். அந்தப் படம் இன்றுவரை இந்திய சினிமாவின் அடையாளமாக இருக்கிறது. இந்த சூழலில் 30 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இரண்டு பேரும் இணைந்திருக்கிறார்கள். படத்துக்கு தக் லைஃப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது.
இப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் நடிக்க கமிட்டாகியிருக்கின்றனர். ஏற்கனவே மன்மதன் அன்பு, தூங்கா வனம் ஆகிய படங்களில் கமல் ஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. இதனையடுத்து தற்போது மூன்றாவது முறையாக கமலுடன் நடிக்கிறார். இந்தச் சூழலில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் கண்டிப்பாக தொடங்கிவிடும் என்று தகவல்கள் வெளியாகி கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அதன்படி 22ஆம் தேதி கமல் ஹாசன் போர்ஷனுக்கான ஷூட்டிங்கை தொடங்க மணிரத்னம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் படத்தின் ஷூட்டிங்கை மே மாதத்துக்குள் ஒரேகட்டமாக முடித்துவிட மணிரத்னத்துக்கு கமல் ஹாசன் கண்டிஷன் போட்டிருப்பதாக பேச்சு எழுந்திருக்கிறது.