ஷாருக்கானுக்காக அந்த விஷயத்திற்கு ஓகே சொன்ன நயன்தாரா…

by vignesh

முதல் முறையாக ஹிந்தி சினிமாவிற்குள் என்ட்ரி ஆன நயன்தாரா  ஜவான் படத்தின் முலம் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்பட ப்ரோமோஷனுக்கு நயன் தாரா வந்ததில்லை குறிப்பாக ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்து கொண்டதில்லை.

ஆனால், தற்போது தனக்கு பிடித்த நடிகர் ஷாருக்கானுக்காக தனது கொள்கையை நயன்தாரா விட்டுக்கொடுக்க போகிறார் என கூறப்படுகிறது.  இக்கரையை காட்டிலும் அக்கரை  பச்சைபோல அம்மணிக்கு என தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர்.

You may also like

Leave a Comment