லியோ படப்பிடிப்பு குறித்து இயக்குனர் கெளதம் மேனன் கொடுத்த அப்டேட்

by vignesh

லியோ படத்தின் அறிவிப்பிலிருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க ரசிகர்கள் இப்படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். இந்நிலையில் லியோ படத்தின் இறுதிகட்ட படப்ப்பிடிபிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. வரும் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி லியோ திரைப்படம் உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் லியோ திரைப்படம் குறித்தும் படப்பிடிப்பு தள அனுபவம் குறித்தும் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் அவர்கள் கூறுகையில்,

தளபதி கூட நடிக்குறது சவாலாகவும் இருந்தது. வசனங்கள் எனக்கு நிறைய இருந்தது. விஜய் சார் சொன்னார் ‘சார் முன்னாடியே லைன் சொன்னா மட்டும் நீங்க சீன் பண்ணுங்க. லோகேஷ் இப்போ கொடுத்தா சீன் பண்ண மாட்டேனு சொல்லுங்க’ னு சொல்லி சிரிச்சார்.

ரொம்ப அருமையான அனுபவம். முன்னாடி பண்ண சில படங்கள் ஏன் இது பண்ணோம்னு தோனும். கதை நல்லா சொன்னாலும் அவங்க படப்பிடிப்புல என்ன பண்ணாங்க னு தெரிய வருது.  முதல் நாள் நல்லாருக்கும் அடுத்தடுத்த அந்த ஆர்வம் அது இருக்காது. அது லியோல இல்லை.

மேலும் லியோ படத்தில் கௌதம் மேனன் கதாபாத்திரம் பெயர் குறித்து இணையத்தில் பரவாலாக விவாதம் செய்யப்பட்டு வருவது குறித்து கேட்கையில் “மலேசியாவில் ஒரு பேட்டியில் ரொம்ப வற்புறுத்தி கேட்டதால என் பெயர் ‘ஜெ’ ல தொடங்கும்‌னு சொன்னேன். விஜய் சார் பத்தி நியூஸ் வந்ததான் வைரலாகும்‌னு  நினைச்சேன். இதுவே இப்படி ஆயிடுச்சு..” என்றார்.

You may also like

Leave a Comment