வெளியானது லியோ சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ்…

by vignesh

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சஞ்சய் தத், இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் லியோ படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத்திற்கு தரமான ட்ரீட் ஒன்றை கொடுத்துள்ளது படக்குழு.

முறுக்கிய மீசையுடன் டெரர் லுக்கில் காணப்படும் சஞ்சய் தத், வாயில் சிகரெட்டுடன் திரும்பி சலாம் போடுகிறார். அவரது பின்னணியில் மிகப் பெரிய கழுகு உருவம் உள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ் வீடியோவுக்கு செம்ம மாஸ் வைப் கொடுத்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை லோகேஷ் இன்னும் எகிற வைத்துவிட்டதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment