லியோ இசை வெளியீட்டு விழா எப்போது???

by vignesh

விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், ‘லியோ’ படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 5-ஆம் தேதி மலேசியாவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment