சந்திரமுகியாக கங்கனா ரனாவத் லுக் வெளியீடு…

by vignesh

பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.

’சந்திரமுகி 2’ படத்தின் முக்கிய அங்கமான ‘வேட்டையன் ராஜா’ கதாபாத்திரத்தின் முதல் தோற்றத்தை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இந்த நிலையில் இப்படத்தில் கங்கனா ரனாவத்தின் தோற்றத்தை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பாகத்தில் ‘ஜோதிகா’ ஏற்று நடித்த ‘சந்திரமுகி’ கதாபாத்திரத்தில் கங்கனா நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. படத்தை செப்டம்பர் 15-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

You may also like

Leave a Comment