கமல்ஹாசன் தற்போது அமெரிக்காவில் தங்கி இருக்கிறார். அதாவது கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்ற காமிக்கான் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தார். அதுமட்டுமல்லாது அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் கல்கி படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவும் அங்கு வைத்துதான் வெளியிடப்பட்டது.
கமல்ஹாசன் மட்டுமன்றி இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் அமெரிக்காவுக்கு சென்று இருக்கிறார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசனும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள ஆஸ்கர் மியூசியத்தை சுற்றிப்பார்த்துள்ளனர். அதுமட்டுமல்லாது ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்பட்ட காட்ஃபாதர் திரைப்படத்தையும் கண்டு ரசித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகின்றன.