ரஜினியை சந்தித்த ‘2018’ படத்தின் இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் !

by vignesh

‘2018’ படத்தின் இயக்குநர் ஜூட் அந்தனி ஜோசப் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அற்புதமாக தொடங்கிய நாள்” என உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பான தனது உற்சாகத்தை சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “என்ன ஒரு அற்புதமான படம் ஜூட். எப்படி படமாக்கினீர்கள்?  என நீங்கள் கூறியதையடுத்து, ஆஸ்கர் விருதுக்கான ஆசீர்வாத்ததை உங்களிடமிருந்து பெற்றோம். “போய் ஆஸ்கார் கொண்டு வா, என் ஆசிகள் மற்றும் பிரார்த்தனைகள்” என நீங்கள் கூறியது மறக்க முடியாது.  இதை ஏற்படுத்திக்கொடுத்த சௌந்தர்யாவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment