வெளியானது ஜவான் பாடல் மேக்கிங் வீடியோ…

by vignesh

ஆர்யாவை வைத்து ராஜா ராணி, விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய அட்லீ இப்போது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு, ப்ரியாமணி, தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். 2021ஆம் ஆண்டே படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டாலும் சில காரணங்களால் படப்பிடிப்பு முடிவதில் தாமதம் ஏற்பட்டது.

ஒருவழியாக படத்தின் ஷூட்டிங் முடிந்து செப்டம்பர் 7ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தை ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருக்கிறார். முதலில் ஜூன் இரண்டாம் தேதி படம் ரிலீஸாவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழலில் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் வந்த இடம் பாடலின் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகியிருக்கிறது. அதில் ஷாருக்கானுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைக்கும் காட்சிகளும், ஷாருக்குடன் அட்லீயும் இணைந்து நடனம் ஆடும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. பாடலானது சென்னையில் செட் போடப்பட்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

You may also like

Leave a Comment