இமயமலை செல்லும் ரஜினிகாந்த்.. ரசிகர்கள் உற்சாகம்…

by vignesh

ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மலையாளத்திலிருந்து மோகன் லால், தெலுங்கிலிருந்து சுனில், கன்னடத்திலிருந்து சிவராஜ் குமார், ஹிந்தியிலிருந்து ஜாக்கி ஷெராஃப் என பான் இந்தியா ஸ்டார்கள் இதில் களமிறங்கியிருக்கின்றனர். இவர்கள் தவிர வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படத்துக்கான டிக்கெட் புக்கிங் சில நாட்களுக்கு முன்பு வெளிநாடுகளில் தொடங்கியது. இந்தியாவில் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. ரஜினிகாந்த் வரிசையாக இரண்டு படங்களை தோல்வி படங்களாக கொடுத்த பிறகு ஜெயிலரில் நடித்திருப்பதால் படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர். அதனையொட்டி டிக்கெட்டுகளையும் சரசரவென புக் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. முக்கியமாக அமெரிக்காவில் மூன்று வாரங்களுக்கு படமானது ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் ரஜினிகாந்த் நாளை இமயமலை செல்லவிருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதுவரை ரஜினிகாந்த் தன்னுடைய படங்கள் ரிலீஸ் ஆகும்போது எப்போதெல்லாம் இமயமலை சென்றிருக்கிறாரோ அப்போதெல்லாம் அந்த படங்கள் மெகா ஹிட் ஆகியிருக்கின்றன என்ற பேச்சும் இண்டஸ்ட்ரியில் ஓடுவது கவனிக்கத்தக்கது.

You may also like

Leave a Comment