இந்தியன் 2 OTT ரிலீஸை கைப்பற்றிய Netflix….

by vignesh

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் படத்தில் இடம்பெறும் நடிகர் கமல்ஹாசனின் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்டு விட்டன.

தற்போது சித்தார்த் உள்ளிட்டவர்களின்  காட்சிகளை மட்டும் ஷங்கரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றி இயக்குநர்களாக உருவெடுத்த சிம்பு தேவன், அறிவழகன், வசந்தன் பாலன் உள்ளிட்டோர் படமாக்கி  கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இந்நிலையில் OTT ரிலுசுக்கான உரிமத்தை பெரும் தொகை கொடுத்து Netflix கைப்பற்றியுள்ளதாக அதன் X பக்கத்தில் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment