சரத்குமாரின் ‘ஹிட்லிஸ்ட்’ டீசர்!!!

by vignesh

க்ரைம் த்ரில்லர் ஜானரில் படம் உருவாகியுள்ளது. ‘சிங்கமோ திமிங்கலமோ வேட்டக்காரன பாத்துதான் மிருகங்கள் பயப்படணும்’ என்ற கம்பீரமான வாய்ஸ் ஓவரில் இன்ட்ரோ கொடுக்கிறார் சரத்குமார். சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்க்ஸ்லி என அடுத்தடுத்த நடிகர்களின் ரியாக்சனை வெளிப்படுத்த எங்கும் நிக்காமல் பரபரவென ஓடுகிறது டீசர்.

சைக்கோ கொலைகாரனை தேடும் போலீஸ் என்ற ஜானரில் இப்போதுதான் ‘போர் தொழில்’ பார்த்தோம். அதிலும் சரத்குமார் தான் காவலர். அப்படியிருக்க அதே டெய்லர் அதே வாடகை என்ற முடிவுக்கும் வந்து விட முடியாது. இருப்பினும் பெரும்பாலான க்ரைம் த்ரில்லரின் ஒன்லைன் இதுவாகத்தான் இருக்கும் என்பதால் தனித்தன்மையான திரைக்கதை மட்டுமே படத்தை தூக்கி நிறுத்தும். படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. மாறாக ‘ஹிட்டிங் சூன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஹிட்டிங் எப்படியான ஹிட்டிங் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 

You may also like

Leave a Comment