பிக்பாஸு வீட்டுக்குள் நுழைய போக்கும் முதல் போட்டியாளர் எதிர்நீச்சல் மாரிமுத்தா???

by vignesh

பெரிய திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கிவருகிறார் மாரிமுத்து. அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். அதில் அவரது எதார்த்தமான நடிப்பும், பேச்சும் அட்டகாசமாக இருக்கிறது. அதன் காரணமாக அவர் சினிமாவில் அடைந்த பிரபலத்தைவிட சீரியல் மூலம் பிரபலமடைந்திருக்கிறார். சமூக வலைதளங்களிலும் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது குறித்து பேசிய மாரிமுத்து, “பிக்பாஸ் என்பது பெரிய ப்ளாட்ஃபார்ம். அதில் கலந்துகொண்டால் உலகம் முழுவதும் பிரபலமாகிவிடலாம் என்பது உண்மைதான். ஆனால் இப்போது நான் நீண்ட ப்ராஜெக்ட்டில் இருக்கிறேன். அது பெயரையும் பெற்று தந்திருக்கிறது. அந்த சீரியலை விட்டு எங்கேயும் நகரமுடியாது.

ஒருவேளை பிக்பாஸ் வீட்டுக்குள் போனால் வீட்டை ரெண்டாக்காமல் விடமாட்டேன். ஒரு உலுக்கு உலுக்கிடுவேன். நான் மட்டும் இந்த சீசனுக்குள் போனால் பிக்பாஸ் வரலாற்றிலேயே இந்த சீசன் தான் முதலிடத்தில் இருக்கும்” என்றார்.

You may also like

Leave a Comment