ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே குடித்தாரா த்ரிஷா?…

by vignesh

த்ரிஷா சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆன பிறகும் இப்போதும் அவர் லைம் லைட்டிலேயே இருக்கிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படம் வந்தது. அதன் பிறகு கௌரவ் நாராயணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். நயன் தாராவும் திருமணம் செய்துகொண்டு குழந்தைகளை கவனிப்பதில் கவனம் செலுத்துவதால் த்ரிஷா மீண்டும் பெரிய ரவுண்டு வர ஆரம்பித்திருக்கிறார்.

த்ரிஷா எவ்வளவு புகழடைந்திருக்கிறாரோ அதே அளவு சர்ச்சையையும் சந்தித்தவர். அவர் பயங்கரமாக மது குடிப்பார் என்ற தகவல் பல காலமாகவே திரைத்துறையில் உண்டு. இந்தச் சூழலில் பத்திரிகையாள செய்யாறு பாலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய விஷயத்தில், “சைதாப்பேட்டையில் ஒரு ஸ்லம் ஏரியாவில் படத்தின் ஷூட்டிங் நடந்தது. முன்னணி ஹீரோவும், முன்னணி ஹீரோயினும் நடித்துக்கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் எலைட் ஷாப்கள் இல்லை. பர்மா பஜாரிலிருந்து மதுபானம் ஒருவர் மூலம் வாங்கி வரப்பட்டு நடிகையிடம் கொடுக்கப்பட்டது. அதை அவர் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொண்டார். அந்தப் படம் நம்பர் பெயரில் வந்த படம்” என்றார். இதனை பார்த்த ரசிகர்கள் சைதாப்பேட்டையில் ஸ்லம் ஏரியாவில் எடுக்கப்பட்டு நம்பர் பெயரில் வந்த படம் ஆறு படமாகத்தான் இருக்க முடியும். அந்த சமயத்தில் த்ரிஷாதான் முன்னணி நடிகையாக இருந்தார். எனில் ஷூட்டிங் ஸ்பாட்டில் மதுபானம் வாங்கி குடித்தது த்ரிஷாதானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

You may also like

Leave a Comment